சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு.. 6 பேர் பலி.. பலர் காயம்..

ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ‘ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்..

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. பள்ளிகள், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையங்கள் என பல இடங்களில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. அந்த வகையில் மே 14 அன்று ஒரு மளிகைக் கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதே போல் மே 24 நியூயார்க்கில் உள்ள தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்..

இந்நிலையில் ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்.. 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 24 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குற்றவாளியை தேடி வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

Maha

Next Post

#Ticket: இனி பேருந்தில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க கூடாது...! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்...!

Tue Jul 5 , 2022
நடத்துநர்கள் பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்தில் , நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் போது , எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து பயணிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை அரசு தரப்பில் மேற்கொள்ளவில்லை. தற்பொழுது புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நடத்துநர்கள் […]

You May Like