fbpx

#Breaking : ஜூலை 28-ம் தேதி இந்த 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை ஒட்டி, 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 2.500 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. கிட்டத்தட்ட 80% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.. ஜூலை 28-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்..

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை ஒட்டி, 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. எனவே அன்றைய தினம் இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர் ஏ.வ. வேலு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..

Maha

Next Post

அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.. ஆர்பிஐ இயக்குனருக்கு ஓபிஎஸ் கடிதம்...

Sat Jul 23 , 2022
அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக பொருளாளர் தாக்கல் செய்ய வேண்டிய வரவு, செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். பொதுக்குழு முடிவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like