fbpx

#Breaking : கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு..? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன..

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் கடுமையான நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. இன்றுவரை, உலகெங்கிலும் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன,

இந்நிலையில் கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பி உள்ளார்.. அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கும் என சந்தேகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.. அறிகுறி தென்படும் நபரின் மாதிரி முடிவுகள் புனே வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்ட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. சோதனை முடிவுகள் இன்று மாலைக்குள் வந்துவிடும் என்றும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ள நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. மேலும் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

Maha

Next Post

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு..! ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை தீவிர விசாரணை..!

Thu Jul 14 , 2022
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று […]
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு..! உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

You May Like