நடிகர் விஜய் புதிதாக தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ”தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ளது. இது டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவும் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நடிகர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
அதேபோல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளர்.