பட்டா இல்லாமல் புறம்போக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 6 மாதங்களில் சென்னையில் 2,90,000 பேர் உள்பட சுமார் 6 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சர்க்கார் பட்டா என்ற பெயரில் உள்ள பட்டாக்களை உரிமையாளர்கள் பெயரில் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலத்தில் ஐந்து ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டா வழங்கப்படுகிறது. இவை பெரும்பாலும் பெருநகர பகுதிகளில் நடப்பதில்லை. இருப்பினும், 5 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், அந்த நிலம் அரசுக்கு தேவையில்லாததாக கருதப்பட்டால், அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம். இவர்கள் புறம்போக்கு நிலத்திற்கான பட்டா பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.