முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் அரசின் முன்னறிவிப்பு திட்டங்களான முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 முறை ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை புதிய திட்டங்களின் தொடக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
மேலும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் திட்டங்களின் நிலை தொடர்பாக முதல்வரிடம் எடுத்துரைத்து வருகிறார்கள்.
மேலும் முதலமைச்சரின் முகவரி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்