நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் அறிவிப்புகள்
➦ ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
➦ 2047ஆம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம்.
➦ சிறிய மற்றும் நடுத்தர அணு உலைகளை உருவாக்க ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
➦ விவசாயம் உள்ளிட்ட 3 முக்கிய துறைகளின் தேவையை பூர்த்தி செய்ய ஏஐ தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும்.
➦ நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். இதற்காக ஜல் ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More : BUDGET BREAKING | பெண்களுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு..!!