fbpx

BREAKING | பொங்கல் பண்டிகை..!! ஜனவரி 14 முதல் 19ஆம் தேதி வரை தொடர் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16ஆம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இந்நிலையில், ஜனவரி 14-ம் தேதி முதல் தொடங்கி 16ஆம் தேதி வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும், அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், அந்த கோரிக்கையை ஏற்று, 17ஆம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்களுக்கு விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : திடீரென கார் மீது மோதிய பேருந்து..!! நூலிழையில் உயிர் தப்பிய கங்குலி மகள்..!! நடந்தது என்ன..?

English Summary

The Tamil Nadu government has declared one more day as a government holiday for the Pongal festival.

Chella

Next Post

சீனாவில் HMPV பரவல்.. 2025-ல் மற்றொரு பெருந்தொற்று என அன்றே கணித்த இந்திய ஜோதிடர்.. வைரலாகும் பதிவு..!

Sat Jan 4 , 2025
Indian astrologer Anirudh Kumar Mishra predicted in 2022 that another pandemic would break out in 2025.

You May Like