இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அகரம் காலனி. இப்படத்தின் படப்பிடிப்பு செங்குன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று படப்பிடிப்பு தளத்தில் திடீரென மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதில் லைட்மேன் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.