fbpx

விரைவில் திறக்கப்படுகிறது பள்ளிகள்…..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

வரும் 7ம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது கோடை விடுமுறை முடிவடைந்து பொதுமக்கள் பயணிகள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் மற்ற மாவட்ட நகரங்களுக்கு பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்காக பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு 3 தினங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கு 900 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல முக்கிய மாவட்ட நகரங்களாக இருக்கக்கூடிய பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிலும், குறிப்பாக கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் இருந்தும், பெங்களூரு மாநிலத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர தனியாக 1300 சிறப்பு பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 2200 சிறப்பு பேருந்துகள் எதிர்வரும் வெள்ளி சனி ஞாயிறு போன்ற மூன்று தினங்களில் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது பயணிகளுக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலமாக எல்லா பேருந்து பணிமனைகளிலும் ஓட்டுநர் நடத்துனர் கூட்டிட்டு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு 300 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகள் அரசின் இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பிரபல பாடகி மீது துப்பாக்கிச் சூடு!!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Fri Jun 2 , 2023
பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாடகி உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் […]

You May Like