fbpx

#Breaking : மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரான சோனியா காந்திக்கும் அவர் அனுப்பி உள்ளார்..

எனினும் தான் ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.. காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவி சமீபத்தில் அவர் வழங்கப்பட்டது.. ஆனால் அந்த பொறுப்பு வழங்கப்பட்ட அன்றைய தினமே அதில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.. அண்மை காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விலகி வருகின்றனர்.. கபில் சிபில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது குலாப் நபி ஆசாத்தும் விலகி உள்ளார்.. காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த 23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இலவசங்கள் தொடர்பான வழக்கில் திடீர் திருப்பம்..! 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவு..!

Fri Aug 26 , 2022
இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதம் தேவை என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா கோலி, சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் […]

You May Like