கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவர், தோலிகட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை படித்தார். இந்தியாவின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெற்றார். கேரளாவில் நீதிபதியாக பணியாற்ற பின் பெருமை மிகுந்த உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் பாத்திமா பீவி ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஆட்சியிலும் ஆளுநராக தொடர்ந்து வந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தவர் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.