fbpx

#Breaking | புரட்டி எடுக்கும் கனமழை..!! 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..!! வெளியான அறிவிப்பு..!!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்ட மக்களும் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நெல்லை, தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை..!! என்ன நடக்கிறது..? சென்னையில் பரபரப்பு..!!

Mon Dec 18 , 2023
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள் அனைத்துமே வெள்ள நீரால் மூழ்கி இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஒரு ரயில் செல்லக்கூடிய பகுதி தடைபட்டு, பயணிகள் ரயிலில் தவித்து வருவதாகவும் […]

You May Like