கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, என்னுடைய நிபுணறையை ஏற்றுக் கொண்டால் கூட்டணிக்கு தயார் என்று குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் பதவி வழங்குவதுடன் பணியில் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது, முக்கியத்துறைகள் ஒதுக்கீடு, தேர்தல் அறிக்கை நிறைவேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அவர் விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.