fbpx

இந்தியாவில் பிரிட்டானியாவின் புதிய சாதனை!… ஒரே வருடத்தில் ரூ.100 கோடி விற்பனை செய்த Treat Croissant!…

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒருவருடத்தில் பிரிட்டானியா நிறுவனம் Treat Croissant என்ற ஸ்னாக்ஸ் 100 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.

பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் பிஸ்கட்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அதனடிப்படையில் உலகம் முழுவதும் தனது உணவு பொருள்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் மேற்கத்திய ஸ்னாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்தது. கடந்த சில வருடங்களாகவே மேற்கத்திய உணவுகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வரும்நிலையில், இந்தியாவில் அறிமுக செய்யப்பட்ட ஒருவருடத்தில் Treat Croissant என்ற ஸ்னாக்ஸ் 100 கோடி ரூபாய் விற்பனை இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாக பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்நாக்ஸை பிரிட்டானியா நிறுவனம் தனது சொந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதாகவும் மேற்கத்திய உணவாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பிடிக்கும் வகையில் சில சுவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்னாக்ஸ் வர்த்தகத்தில் தொடர்ந்து தங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் Treat Croissant அறிமுகம் செய்ததிலும் அதில் கிடைத்த வெற்றியும் மிகுந்த ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், உலக தரம் வாய்ந்த இந்த ஸ்னாக்ஸ் தற்போது இந்தியர்களுக்கு மலிவான விலையில் நாங்கள் கொடுத்து உள்ளோம் என்றும் இன்னும் இதே போன்ற ஸ்நாக்ஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடுத்த 3 வருடங்களில் ரூ.300 விற்பனை இலக்கு பெற முயற்சித்து வருவதாகவும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்

Kokila

Next Post

விடக்கூடாது...! தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடிக்கு அடுத்த செக் வைக்கும் ஓ.பி.எஸ்...!

Sun Mar 19 , 2023
அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பிஎஸ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

You May Like