fbpx

’தம்பி காப்பாத்து’..!! அக்காவுக்கு லவ் டார்ச்சர்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்..!!

இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞரை பெண்ணின் தம்பி உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே கடையில் பணியாற்றி வரும் மணிகண்டன் (20) என்பவர் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பலமுறை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை துணிக்கடை மேலாளரிடம் இளம்பெண் தெரிவித்ததால் மணிகண்டனை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு அந்த இளம்பெண் ஆவடி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மணிகண்டன், மீண்டும் லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

’தம்பி காப்பாத்து’..!! அக்காவுக்கு லவ் டார்ச்சர்..!! ஒரே ஒரு ஃபோன் கால்..!! ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர்..!!

இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண் உடனே தனது 17 வயது தம்பியை தொடர்பு கொண்டு ஆவடிக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் சாலமன், கருப்புசாமி ஆகிய இருவரை அழைத்துக் கொண்டு வந்த பெண்ணின் தம்பி, மணிகண்டனை பார்த்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று தாக்கியதோடு கத்தியால் மார்பு பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், கருப்புசாமி மற்றும் சாலமனை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இளம்பெண்ணின் தம்பியை போலிசார் தேடி வருகின்றனர்.

Chella

Next Post

திருவண்ணாமலை தீபம்..!! தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்..!! உடனே இதை பண்ணுங்க..!!

Sun Dec 4 , 2022
இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த ஆண்டு 30 […]
திருவண்ணாமலை தீபம்..!! தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விநியோகம்..!! உடனே இதை பண்ணுங்க..!!

You May Like