டெல்லியில் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை வீட்டு உரிமையாளர் தலைமுடியைப் பிடித்து கழுத்தை இறுக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லி நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் அவரை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்து வந்துள்ளார்.
சிறுமியை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பித்து வீட்டுக்குச் செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், வீட்டின் உரிமையாளர் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில், வேலைக்கார பெண்ணான சிறுமியை வீட்டின் உரிமையாளர் ஷெபாலி கவுல், லிப்டில் வைத்து தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி, மக்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது.
வீட்டின் உரிமையாளரான ஷெபாலி, சிறுமியின் தலைமுடியைப் பிடித்து வலுக்கட்டாயமாக லிப்டில் இழுத்துச் செல்வதையும் வீடியோ காட்டுகிறது. இந்த காட்சிகள் வைரலானதையடுத்து, போலீசார் ஷெபாலி கவுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.