fbpx

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! – ஈஷா விளக்கம்

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி என்ற பி.எஸ்.என்.எல்லின் தவறான கட்டண விதிப்பு குறித்து ஈஷா விளக்கம் அளித்துள்ளது.

டிசம்பர் 2018 – ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ.2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனம் தவறாக ரசீது அனுப்பியிருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில், இந்த கட்டண விதிப்பு தவறானது என BSNL-யிடம் ஈஷா முறையிட்டது. இதற்கு முன்பு, கடந்த 10 ஆண்டுகளாகவே ஈஷா யோகா மையத்தின் மாதந்திர தொலைபேசி கட்டணம் வெறும் ரூ.22,000-க்கும் குறைவாகவே இருந்துள்ளது.

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! - ஈஷா விளக்கம்

ஆனால், மேல்குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என பி.எஸ்.என்.எல். அச்சுறுத்தியதால், ஈஷா யோகா மையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தனி நபர் ஆர்பிட்ரேட்டராக நியமித்து இதனை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் பி.எஸ்.என்.எல்லின் வாதத்தை ஏற்க மறுத்த ஆர்பிட்ரேட்டர் பத்மநாதன், டிசம்பர் 2018 – ஜனவரி 2019 ஆகிய இரண்டு மாதங்களுக்கு சராசரி மாத கட்டணமாக தலா ரூ.22,000 செலுத்த உத்தரவிட்டார்.

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! - ஈஷா விளக்கம்

ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதி நிலை நிறுத்தப்படும் என ஈஷா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தமிழகத்தில் சமூக நீதி என்பது வெறும் மேடைப் பேச்சாகவே உள்ளது... அண்ணாமலை..!!

Fri Aug 12 , 2022
பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி மன்ற தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்ந்து வருகிறார். ஆனால் இங்கே, சமூக நீதியை நாங்கள் நிலைநாட்டி விட்டோம் என்று […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like