புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு பகுஜன் சமாஜ் கட்சி என் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு மறுக்கப்பட்டது காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதேபோல இந்த நிகழ்ச்சியை ஆந்திர முதலமைச்சர் நவீன் பட்நாயக் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, மே 28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை வரவேற்று, திறப்பு விழாவுக்கான அழைப்பைப் பெற்றதாகவும், ஆனால் தன்னால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்றும் கூறினார். தனதங கட்சியின் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால் அதில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் “பழங்குடி பெண்களின் மரியாதையுடன் இதை இணைப்பதும் நியாயமற்றது. குடியரசுத் தலைவரை போட்டியின்றித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தும் போதே இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் யோசித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.