fbpx

துளிர்விடும் ரொமான்ஸ்!… குளிர்காலத்தில் அந்த உணர்வு அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?

குளிர்காலங்களில் தம்பதிகளிடையே உடலுறவு உணர்வு அதிகரிக்க அறிவியல் ரீதியாக உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஹார்மோன் மாற்றங்கள் : குளிர் காலத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டதாகவும் இருக்கிறது. இதனால் நம் உடலானது மெலடோனின் ஹார்மோன்களை அதிகமாக சுரக்க தொடங்குகிறது. இதனால் தூக்கமும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் வெகு நேரத்திற்கு போர்வையை போர்த்திக் கொண்டு நாம் தூங்கிக் கொண்டிருப்போம். இது மட்டுமல்ல குளிர்காலத்தில் பாலியல் ஆசைகளுக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களும் அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் அதிகரித்தால் பாலியல் உறவு மீதான வேட்கையும், சக்தியும் அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் குளிர் காலத்தில் சுரக்கக் கூடிய ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் காதல் உணர்வுகளை தூண்டுகிறது. இதனால் தம்பதியர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் ஆண்களுக்கு டோபமைன் என்னும் ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் சுரப்பதால் வழக்கத்தை விட கூடுதலான நேரம் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர். வாய்ப்புகள் அதிகம் : குளிர் காலத்தில் எப்படியும் நாம் அதிக நேரம் வெளியிடங்களில் சுற்றித் திரிய மாட்டோம். பெரும்பாலும் வீட்டில், அதுவும் படுக்கை அறையில் அதிக நேரத்தை செலவிடுவோம். அதுவே நம் சிந்தனையை தூண்டி, உடல் ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

காரமான, மசாலா உணவுகள் உங்கள் ரத்த ஓட்டத்தையும், உடல் உப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும். அது மூளையில் உள்ள நரம்புகளை தூண்டும். டார்க் சாக்கலேட் சாப்பிட்டால் மூளையில் உள்ள நியுரோடிரான்ஸ்மிட்டர் நரம்புகள் தூண்டப்படும். மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலில் ரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்கும். அது பாலியல் வேட்கையை தூண்டவும், திருப்தி அடையவும் பக்கபலமாக அமையும். ஆக குளிர் காலத்தில் உங்களுக்கு பாலியல் வேட்கை அதிகரிக்கும்போது அதுகுறித்து குற்ற உணர்வு ஏற்படாமல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது இயற்கையாக நடைபெறுகின்ற மாற்றமே. குளிர் காலத்தின் நீண்ட இரவு நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நெருங்கிச் செல்ல அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

Kokila

Next Post

புது வருடத்தில் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகனுமா.? வாஸ்து படி நீங்கள் வளர்க்க வேண்டிய செடிகள்.!

Sun Dec 24 , 2023
இன்னும் ஒரு வாரத்தில் புது வருடம் பிறக்க இருக்கிறது. அனைவரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் 2024-ம் ஆண்டின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வருகின்ற ஆண்டில் செல்வ வளம் பெருக வேண்டும், அமைதி நிலவ வேண்டும் மற்றும் சந்தோசம் திளைக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இவை நடக்க வேண்டும் என்றால் புத்தாண்டு தொடக்கத்திலிருந்து சில செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புது வருட தொடக்கத்தில் […]

You May Like