fbpx

இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல்…! மொத்தம் 7 சிறப்பு அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும்…!

சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரம் வெளியாக உள்ள நிலையில், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முன்னதாக, கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 15-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரையும் அளித்தார்.

இந்நிலையில், ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி,கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிபயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 சிறப்பு அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஆதார் இணைக்காவிட்டாலும் இலவச ரேஷன் திட்டம் மூலம் பலன்களைப் பெற பெறலாம்...! முதல்வர் அறிவிப்பு...!

Mon Feb 19 , 2024
பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வைத்துள்ளார், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டைகளை அரசாங்கம் முடக்கம் செய்து வருவதாகக் கூறினார், இதனால் மாநில அரசின் திட்டங்களின் பலன்களை அவர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பெற முடியாத சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பிர்பூமில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய […]

You May Like