fbpx

ஷாக் நியூஸ்…! எருமைப்பால் லிட்டருக்கு ரூ.5 உயர்வு…! மார்ச் 1-ம் தேதி அமல்…! முழு விவரம் உள்ளே…

எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நகரில் மார்ச் 1 முதல் எருமைப்பால் லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் குறித்து பேசிய சங்கத்தின் தலைவர் சிகே சிங்; எருமைப்பாலின் விலை மார்ச் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள 3,000 சில்லறை விற்பனையாளர்கள் – லிட்டருக்கு ரூ.80லிருந்து ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 2022க்குப் பிறகு, எருமைப் பால் விலை லிட்டருக்கு 75 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டதன் மூலம், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பால் விலையில் ஏற்பட்டுள்ள இரண்டாவது முறையான விலை உயர்வு மீண்டும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Vignesh

Next Post

சிறை அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி!... அறுவை சிகிச்சையின்றி அகற்றம்!... பீகார் சிறையில் பரபரப்பு!

Sat Feb 25 , 2023
பீகாரில் சிறை அதிகாரிகளுக்கு பயந்து கைதி ஒருவர் விழுங்கிய செல்போனை எந்தவித அறுவை சிகிச்சையின்றி வயிற்றில் இருந்து பாட்னா மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில், தடை செய்யப்பட்ட நிலையிலும் பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகள் கிடைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. அதனடிப்படையில் அடிக்கடி சிறையில் அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை சோதனை செய்தபோது, அதிகாரிகளுக்கு பயந்து குவாஷிகர் […]

You May Like