fbpx

தமிழகமே..! கட்டிடம் கட்டும் உயரம் 12-ல் இருந்து 14 மீட்டராக உயர்வு…! அமைச்சர் முத்துசாமி சூப்பர் தகவல்…!

அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர உள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி; ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர உள்ளது. தளப்பரப்பு குறியீடு என்பது 2.25 மற்றும் 3.25 ஆகியவற்றுக்கு இடையில் ஒரு அளவை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

மேலும், சுயசான்று அளிக்கும் திட்டத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், இப்போது எத்தனை அனுமதி பெறப்பட்டது. அதில் விதிமீறல் இல்லாதது எவ்வளவு என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டியுள்ளது. விதிமீறல் குறைந்தால் அந்த திட்டத்துக்கு மாறலாம். பொறியாளர்கள், ஆர்க்கிடெக்ட் நிபுணர்கள் பொறுப்பேற்று, அரசுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் அந்த திட்டத்துக்கு செல்லலாம். பணிமுடிப்பு சான்றிதழை பொறுத்தவரை 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை எனும் நடைமுறை தற்போது உள்ளது. இனி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் மாஸ்டர் பிளானை பொறுத்தவரை 8 தயாரிக்கப்பட்டுள்ளது. வனம் சார்ந்த ‘ஹாக்கா’ பகுதி என்பது சில மாவட்டங்களில் பிரச்சினை உள்ளது. இதில் தற்போது, கிராமம் என்று எடுப்பதை விடுத்து, குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு மட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடை இல்லா சான்றிதழ்கள் எண்ணிக்கையை குறைத்து ஆன்லைனில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குட் நியூஸ்..! மத்திய அரசின் பெண் ஊழியர்கள் கணவர்களுக்கு பதிலாக தங்கள் குழந்தைகளை ஓய்வூதியம் பெற பரிந்துரை செய்யலாம்...!

Tue Jan 30 , 2024
பெண் ஊழியர் தனது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்காக பரிந்துரைக்கும் உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய குடிமை சேவை (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. பெண் ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்கள் மனைவிக்கு பதிலாக தங்கள் மறைவுக்குப் பிறகு தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க அனுமதிக்கிறது. மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க […]

You May Like