fbpx

குண்டு துளைக்காத வாகனம்..!! மாதம் ரூ.16 லட்சம்..!! அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு..!!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய, மாநில உளவுப்பிரிவு தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே, அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பில், 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதுவரை Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் Z பிரிவு பாதுகாப்பானது அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Z

இதில், 22 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். ‘Z’ பிரிவில் குண்டு துளைக்காத வாகனம் உள்ளிட்ட 5 வாகனங்கள் பயன்படுத்தப்படும். ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கும் தனிப்படைக்கு மாதம் ரூ.16 லட்சம் செலவாகும். அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இந்த தேதியில் ரேஷன் கடைகள் இயங்காது..!! நிர்வாக காரணங்களுக்காக முன்கூட்டியே விடுமுறை..!!

Fri Jan 13 , 2023
ரேஷன் கடைகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இன்று (ஜனவரி 13) பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதிக்குள் […]

You May Like