உத்தரப் பிரதேசத்தில் ரூ.2000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாகனத்தில் நிரப்பிய எரிவாயுவை குழாய் மூலம் மீண்டும் வெளியே எடுத்த சம்பவம் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் ஜல்காவூன் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிவாயு நிரப்பியுள்ளார். அதற்கு, 2000 ரூபாய் நோட்டை அவர் கொடுத்துள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர்.வாடிக்கையாளரும் தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாகனத்தில் நிரப்பிய எரிவாயுவை ஊழியர்கள் குழாய் மூலம் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.