விழுப்புரத்தில் பேருந்து விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் பலத்த பாயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகளை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எதிரே வந்த பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, தடுப்பை உடைத்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.