fbpx

கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது பேருந்து விபத்து… மாணவர்கள் உட்பட 9 பேர் பலி 40 பேர் படுகாயம்…

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற பேருந்து வடகஞ்சேரி மங்கலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததில் கேரள அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எர்ணாகுளம் பசேலியோஸ் வித்யாநிகேதன் சீனியர் பள்ளியில் இருந்து ஊட்டிக்குக்கு செல்லும் வழியில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்தேறியது. மேலும் சுற்றுலாப் பேருந்தை கிரேன் மூலம் சதுப்பு நிலத்தில் இருந்து நகர்த்தியபோது, பேருந்தின் அடியில் ஒரு ஆசிரியர் மற்றும் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் கண்டெடுக்கப்பட்டனர்.

சுற்றுலா பேருந்தில் 41 மாணவர்கள், ஐந்து ஆசிரியர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் என 48 பேர் இருந்தனர். கேரள அரசுப் பேருந்தில் 49 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 5மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் ஆலத்தூர் மற்றும் பாலக்காடு மருத்துவமனைகளில் உள்ளன.

Kathir

Next Post

24 மணிநேரமும் இலவசம்..!! என் வீடு எப்போதும் திறந்திருக்கும்..!! ’அப்படியே அந்த கடைகளையும்’..!!

Thu Oct 6 , 2022
’தன் மீது அன்பு உள்ளவர்களுக்கு என் வீடு எப்போதும் திறந்து இருக்கும்’ என நடிகர் லெஜண்ட் சரவணன் அருள் தெரிவித்துள்ளார். சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் அருள் அண்மையில் ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடிகராகவும் நடித்திருந்தார். இந்தப்படம் பான் இந்தியா படமாக உருவாகி, நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும் லெஜண்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த வசூலை எட்டிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். […]
24 மணிநேரமும் இலவசம்..!! என் வீடு எப்போதும் திறந்திருக்கும்..!! ’அப்படியே அந்த கடைகளையும்’..!!

You May Like