ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்ததில் இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையை சேர்ந்த (ITBP) 6 வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையை சேர்ந்த வீரர்கள் சந்தன்வாரி பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.. இந்நிலையில் அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டு சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். சந்தன்வாரி அருகே பேருந்தின் பிரேக் வேலை செய்யாததால் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளனது.. இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறையை சேர்ந்த 37 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 2 காவலர்கள் உட்பட 39 பணியாளர்கள் அந்த பேருந்தில் இருந்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்..
காயமடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது 6 வீரர்கள் உயிரிழந்ததாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காஷ்மீர் போலீசார் “அனந்த்நாக் மாவட்டத்தில் சந்தன்வாரி பஹல்காம் அருகே நடந்த சாலை விபத்தில், 6 ஐடிபிபி வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்..” என்று தெரிவித்துள்ளனர்..