Sanju Samson: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லரை விடுவித்தது அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது,” என கேப்டன் சஞ்சு சாம்சன் உருக்கமாக பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர். ஐ.பி.எல்., தொடரில் 2018 முதல் 2024 வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். 83 போட்டியில் 3055 ரன் எடுத்தார். இம்முறை சஞ்சு சாம்சன் உட்பட 6 வீரர்களை தக்கவைத்த ராஜஸ்தான் அணி நிர்வாகம், பட்லரை கழற்றி விட்டது. வரும் சீசனில் இவர் குஜராத் அணிக்காக விளையாட உள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது, எனது மூத்த சகோதரர் போன்றவர் பட்லர். கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து விளையாடினோம். வலிமையான பேட்டிங் பார்ட்னர்களாக திகழ்ந்தோம். இப்போதும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டுள்ளோம். இம்முறை பட்லர் அணியில் இல்லாதது மிகவும் சோகமானது.
ஏனெனில் ராஜஸ்தான் கேப்டன் பொறுப்பேற்ற போது, அவர் துணைக் கேப்டனாக இருந்தார். அணியை சிறப்பாக வழிநடத்த தேவையான ஆலோசனை வழங்கினார். என்னைப் பொறுத்தவரையில் ‘தக்கவைக்கும் விதி’ காரணமாக, வீரர்கள் விடுவிக்கப்படுவதை மாற்ற வேண்டும். இதனால் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட நட்பையும், உறவையும் இழக்க நேரிடுகிறது. குடும்பத்தில் ஒருவரான பட்லரை தக்கவைக்க முடியாதது, அணி உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவருக்கும் ஏமாற்றமாக உள்ளது என்று பேசியுள்ளார்.
Readmore: “போர் நிறுத்த முயற்சிக்கு நன்றி; அதிபர் டிரம்பின் யோசனை சரியானது”!. ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு!