fbpx

CAA சட்டம்..!! அமைச்சர் ஐ.பெரியசாமி நிம்மதி..!! வழக்குகளை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

1955ஆம் ஆண்டில் அமலில் இருந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், 2019ஆம் ஆண்டு சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2019ஆம் ஆண்டு இந்த சட்டத்திற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.

ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், சிஏஏ சட்டம் நமது நாட்டில் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளும் சில முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிராக உள்ளனர்.

இதற்கிடையே தான், சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சிஏஏ மசோதா நிறைவேற்றப்பட்டபோது, ஐ.பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது போலீசார் தொடர்ந்து வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தற்போது ஐ.பெரியசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

Read More : Viral Video | ’கட்சியை இணைப்பது யாருக்குமே தெரியாது’..!! நாக்கை மடித்து கொந்தளித்த ச.மு.க. தொண்டர்..!!

Chella

Next Post

நாளை முதல் இ-சேவை மையங்களில் LLR விண்ணப்பிக்கலாம்..!! போக்குவரத்துத்துறை மாஸ் அறிவிப்பு..!!

Tue Mar 12 , 2024
வாகன ஒட்டுநர் உரிமத்திற்கு நாளை முதல் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றும், ரூ.60 கட்டணம் செலுத்தி ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இனி இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் […]

You May Like