fbpx

மகாராஷ்டிரா கனமழை.. ஜூலை 14 வரை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி உள்ளது.. அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது… மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் கனமழை மற்றும் இடைவிடாத மழை காரணமாக நாசிக் மாவட்டத்தில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.. இதே போல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. புனே மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் கோலாப்பூர், பால்கர், நாசிக், புனே மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 14 வரை ‘கன’ முதல் ‘மிக கனமான’ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

நாசிக் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல கோயில்கள் நீரில் மூழ்கின. கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் பின்னர் மீட்கப்பட்டதாகவும் மாவட்ட தகவல் அலுவலகம் (டிஐஓ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கட்சிரோலில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 11 கிராமங்களைச் சேர்ந்த 313 பேர் உதவி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள 128 கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கட்சிரோலி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 129 இடங்களில் இருந்து 353 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சுர்கானாவில் அதிகபட்சமாக 238.8 மிமீ மழையும், பெத் 187.6 மிமீ மற்றும் திரிம்பகேஷ்வரில் 168 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமாசங்கர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் நேற்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் திங்கள்கிழமை கட்சிரோலி மாவட்டத்திற்குச் சென்று மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் வெள்ளத்தால் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படாமல் இருக்க நிரந்தர திட்டம் வகுக்கப்படும் என்று முதலமைச்சர் ஷிண்டே தெரிவித்தார்.. மேலும் திட்டத்தை தயாரிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Maha

Next Post

அஞ்சல் ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் இதை செய்ய வேண்டும்…! இல்லை என்றால் சிக்கல்…!

Tue Jul 12 , 2022
சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது, சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை / ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும் […]

You May Like