fbpx

கீழ்வாதத்திற்கு அற்புதமான மருந்தா.? இது தெரிஞ்சா முட்டைக்கோஸ் தோலை இனி குப்பையில் போட மாட்டீங்க.!

வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் பெரும்பாலானோர் கீல்வாத நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் தீவிரமான வீக்கம் கீல்வாதமாகும். இந்த நோய் ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக இருப்பது உடைந்த எலும்புகள், உடல் பருமன் மற்றும் வயது முதிர்வு ஆகியவையாகும்.

இந்தக் கீல்வாதம் நோய்க்கு பல்வேறு மருந்துகள் இருந்தாலும் இவற்றை முட்டைக்கோஸ் இலைகளின் மூலம் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனங்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட 81 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட 81 நபர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்களில் ஒரு பிரிவினருக்கு முட்டைக்கோஸ் இலைகளை கால் மூட்டுகளை சுற்றி கட்டி விட்டனர். மற்றொரு பிரிவினருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் மற்ற இரண்டு பிரிவினரை விட முட்டைக்கோஸ் இலைகளை பயன்படுத்தியவர்களுக்கு கீல்வாத நோயிலிருந்து நல்ல முன்னேற்றம் கிடைத்தது. மேலும் அவர்களது வலியும் குறைந்தது. இதற்கு முட்டைக்கோஸ் இலையில் இருக்கும் சல்பர்ஃபேன் என்ற தாது காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை பயன்படுத்துவதற்கு நம் வீட்டில் முட்டைக்கோஸில் இருந்து நீக்கப்படும் தோல்களை எடுத்து ஒரு கவரில் போட்டு அதை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். நமக்கு வலி ஏற்படும் போது ஃப்ரீசரில் இருந்து எடுத்து முட்டைகோஸ் தோலை வலி ஏற்படும் பகுதியில் வைத்து கட்ட வேண்டும். இவ்வாறு செய்யும்போது கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலி குறையும்.

Next Post

கண்களுக்கு கீழ் கருவளையமா.? கவலை வேண்டாம்.! வாழைப்பழ தோல் போதும் கருவளையம் காணாமல் போகும்.!

Wed Dec 13 , 2023
கண்கள் உடலின் பிரதான உறுப்புகளில் முக்கியமானது. சிலருக்கு கண்களின் கீழ் மற்றும் கண்களை சுற்றிலும் கருவளையம் தோன்றும். இதனால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். இந்த கருவளையம் தோன்றுவதற்கு பெரும்பாலான காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதும் போதுமான தூக்கம் இல்லாததும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும் மன அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் கண்களில் கருவளையம் தோன்றலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த […]

You May Like