fbpx

ஐயோ…! கன்றுவீச்சு நோய்… மனிதனுக்கு நேரடியாக பரவும்…! உடனே இந்த இலவச தடுப்பூசி போட வேண்டும்…!

கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இது மாடுகளிலிருந்து பால் வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் மனிதனுக்கு பரவும் நோயாகும். கன்றுவீச்சு நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். இத்தடுப்பூசி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 3 வது கட்டமாக மார்ச் 15ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் போடப்படவுள்ளது.

கன்றுவீச்சு நோய் தடுப்பூசி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கன்றுகளுக்கு இலவசமாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌.

Vignesh

Next Post

சாலையோர வியாபாரிகளுக்கு சூப்பர் திட்டம்..! 10,000 முதல் ரூ.50,000 வரை பிணையம் இல்லாத மூலதனக் கடன்...!

Sat Feb 17 , 2024
டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது. முதல் தவணையில் ரூ.10,000 வரையிலும், பின்னர் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளில் முறையே ரூ.20,000 […]

You May Like