உடலுக்கு நீர்ச்சத்தை வாரி வழங்க கூடிய பழங்களில் தர்பூசணி பழம் முதன்மையானது. அதுவும் 92 சதவீத நீர்ச்சத்துடன் கோடை காலத்தில் கிடைப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்கின்றனர்.
தர்பூசணியை அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை சாப்பிடலாமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழும் ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் தோல் வறட்சி ஏற்படாமல் தடுத்து அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தர்ப்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிட்ருலின் தசை பிடிப்பு மற்றும் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
தர்ப்பூசணியை உணவுக்குப் பின் சாப்பிடுவதை விட இடைப்பட்ட உணவாக உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் மிகாமல் தர்ப்பூசணி உட்கொள்ளலாம் பொதுவாக பழங்களை இயற்கையாக உண்ணுவது ஜூஸ் வடிவில் குடிப்பதை விட நல்லது.