fbpx

ஒரு கட்டிங் போடலாமா சார்..? நோயாளிக்கு மது ஊற்றி கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!! சர்ச்சை வீடியோ

நோயாளி ஒருவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மது ஊற்றி கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற போது ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியின் பெயர் நகுலே தெகுரி.

ஒரு கட்டிங் போடலாமா சார்..? நோயாளிக்கு மது ஊற்றி கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!! சர்ச்சை வீடியோ
மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்

இவர் மரத்திலிருந்து கீழே விழுந்ததால் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போதுதான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலையோரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவருக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளி கேட்டதால்தான் தான் மது ஊற்றி கொடுத்ததாக விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சேத்ரபாசிடாஷ் இந்த சம்பவம் ஒரு தனியார் ஆம்புலன்ஸில் நடைபெற்று இருந்தாலும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

ஏன் கிரிக்கெட் விளையாட வர்றீங்க ? வாழைப்பழம் விற்று பிழைக்கலாம்ல... இந்திய வீரர்களை கபில் தேவ் சாடல்

Wed Dec 21 , 2022
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் விமர்சனம் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். மேலும், இதை கருத்தில்கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. இந்தநிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய […]

You May Like