பேருந்து பயணிகளிடம் ஓட்டுநர், நடத்துனர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? – போக்குவரத்துக் கழகம் விளக்கம்

அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாட்டில் சாதாரண நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணிக்கும் பெண்களிடம் நடத்துனர்கள் ஏளனமாக நடந்து கொள்வதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனால் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சிகளுக்கு உதவக் கூடாது: மாநகர போக்குவரத்துக்  கழகம் அறிவிப்பு- Dinamani

அதில், ”பயணிகள் பேருந்துக்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் கூட பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் பஸ்சை குறித்த பஸ் நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பஸ்சை நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடக்கூடாது. வயதான பெண்கள் இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. பேருந்துகளில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

சென்னை மாநகர அரசு பேருந்துகளுக்கான மாதாந்திர, டெய்லி பாஸ் கட்டணம் உயர்வு |  Bus pass fare increased in Chennai - Tamil Oneindia

பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து டிரைவருக்கு விசில் செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்த வேண்டும். பக்கவாட்டில் நிறுத்தக் கூடாது. பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துனரின் விசில் கிடைத்தபின் கதவுகளை மூடிய நிலையில்தான் பேருந்தை இயக்க வேண்டும். ஓட்டநர் இடது பக்கவாட்டு கண்ணாடியைப் பார்த்து யாரும் ஏறவில்லை, இறங்கவில்லை என உறுதி செய்த பின்தான் பேருந்தை இயக்க வேண்டும். பேருந்து புறப்பட்ட பின் பயணிகள் ஓடி வந்தால் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

chennai govt buses in chennai mtc buses in chennai bus service started |  Indian Express Tamil

கதவுகள் இல்லா பேருந்துகளில் பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறும், படிக்கட்டில் நின்றவாறும் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. பேருந்து நிறுத்தம் வருவதை குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியில் இருக்கும்போது பேருந்துக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நடத்துனர் எப்போதும் பேருந்து இயங்கிக் கொண்டு இருக்கும்போது, இரண்டு படிக்கட்டுகளும் அவருடைய பார்வையில் படும்படியான இடத்தில் இருக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

40 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த: அரசு பள்ளி ஆசிரியரின் மன்மத லீலைகள்..!

Mon Jul 4 , 2022
பெங்களூரு கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு தினமும் கரடகியில் இருந்து வந்து சென்றுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் வேலை பார்த்து வந்த முகமது அவருடன் வேலை பார்த்த ஆசிரியை, மாணவிகள், மேலும் அக்கம்பக்கத்து பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சிலரை […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like