தற்போதைய விஞ்ஞான காலத்தில், உடலுக்கு சத்தான பொருட்களை தேடி, தேடி உண்ணும் நிலை ஏற்பட்டு விட்டது. அப்படியே நாம் சிரத்தை எடுத்துக் கொண்டு, உடலுக்கு சத்தான பொருட்களை தேடினாலும், அப்படி உடலுக்கு சத்தான பொருட்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
ஆனால் ஒரு சில மகத்தான சத்துக்களை நம்முடைய உடலுக்கு வழங்கும் ஒரு சில பொருட்கள், நம் வீட்டருகே இருக்கும். ஆனால் ,அதனை நாம் கண்டு கொள்ள மாட்டோம். அப்படிப்பட்ட ஒரு அருமையான குணம் கொண்ட கீரை தான் மணத்தக்காளி கீரை.
இந்த மணத்தக்காளி கீரை வயல்களின் அதிகமாக காணப்படும். இந்த கீரை பல்வேறு ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதேபோல இந்த கீரை பல்வேறு மருத்துவ குணங்களையும், கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கீரையில் உள்ள மகத்துவம் தெரியாமல், இதை பலரும் ஒதுக்கி தள்ளி விடுகிறார்கள்.
இந்த மணத்தக்காளி கீரையை குழம்பு வைத்தும் சாப்பிடலாம், பொரியல் செய்தும் சாப்பிடலாம், இந்த மணத்தக்காளி கீரையை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணமும், அதில் இருக்கக்கூடிய நன்மைகளும் ஒருபோதும் குறையாது. அவ்வளவு மகத்துவம் வாய்ந்தது இந்த மணத்தக்காளி கீரை.
இந்த மணத்தக்காளி கீரையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு, உடலுக்கு தேவைப்படும் பல்வேறு சத்துக்களையும் இது வழங்குகிறது. அதிலும் குறிப்பாக வயிற்றில் புண் இருந்தால், இந்த மணத்தக்காளி கீரை, அதனை குணப்படுத்தி விடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பார்வை குறைபாடு இருப்பவர்களும், இந்த மணத்தக்காளி கீரையை விரும்பி சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால், பார்வை கோளாறு அறவே நீங்கி, கண் பார்வை நன்றாக தெரியும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல இந்த மணத்தக்காளி செடியில் இருக்கும் பழத்தை சாப்பிட்டால், காச நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல இந்த மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்றவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த மணத்தக்காளி இலையை வெறும் வாயில் பறித்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குணமாகும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு மகத்துவங்களையும், மருத்துவ குணங்களையும் தன்னுள் வைத்திருக்கும் மணத்தக்காளியை அனைவரும் சாப்பிட்டு, நம்முடைய உடலுக்கு ஏற்படும் பல்வேறு தீமைகளில் இருந்து, நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.