fbpx

உடல் எடையை குறைக்க உதவும் ரோஜாப்பூ இதழ்களின் டி பற்றி தெரியுமா…! வீட்டிலையே தயாரிக்கலாம்..

ரோஜா பூ இதழ்களை பயன்படுத்தி  ஆரோக்கியமான தேனீரை நம்மால் தயாரிக்க முடியும். இந்த தேநீர் உடல் எடையை வெகுவாக குறைக்க உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தலைமுடி மற்றும் சருமத்திற்கு இது நன்மை தரக்கூடியதாக உள்ளது.

மிகச் சிறப்பான மூலிகை தேநீர் வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த ரோஸ் டீ பல்வேறு உடல்நல ஆரோக்கியம் குறித்த நன்மைகளையும் வழங்குகிறது.

ரோஜா பூ இதழ்களில், ஆன்ட்டி ஆக்சிடென்ட் அழகிற்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இவை எடை குறைப்புக்கு உதவியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு, நாம் சாப்பிட்ட உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கும் இது உதவியாக உள்ளது. நாள்தோறும் இந்த ரோஸ் டீ பருகி வந்தால், உடல் எடை வெகுவாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

டையூரிக் விளைவின் காரணமாக, சிறுநீர் பாதையில் உண்டாகும் நோய் தொற்றுகளை இது வெகுவாக தடுக்கிறது . அதேபோல, நம்முடைய உடலில் இருக்கின்ற பல்வேறு நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவிகரமாக உள்ளது. ஆகவே, இது ஒருவரின் உடலுக்கு தகுந்தவாறு உடல் எடையை குறைக்க உதவியாக உள்ளதாக தெரிகிறது.

இந்த மூலிகை தேநீர் ஒருவரை  பல நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. விட்டமின் சி நிறைந்துள்ள ரோஜாப்பூ தேநீர், உடலில் இருக்கின்ற பல நோய்த் தொற்றுகளுக்கு தீர்வாக அமையும் என்று தெரிகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக காணப்பட்டால், எடை குறைப்பு அதற்கு ஏற்றவாறு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தற்போது இந்த ரோஸ் டீயை தயார் செய்வது எப்படி? ரோஜா பூ செடியிலிருந்து பூக்களை பறித்து அதிலிருந்து சுத்தமாக உள்ள இலைகளை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மூன்று கப் நீர் எடுத்து, பானில் ஊற்றி, அதில் ரோஜா பூ இதழ்களையும் சேர்த்து, லோ ஃபிளேமில் சூடேற்ற வேண்டும். பின்னர், இரண்டு நிமிடம் சென்ற பிறகு நீரின் நிறம் ரோஜா பூ நிறத்தில் மாறிய பின்னர் பரிமாறலாம் என்று சொல்லப்படுகிறது. இதில் இனிப்பான சுவையை சேர்க்க தேனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கொலைக்கு சமம்!... 100 பிறந்த குழந்தைகள், 1100 நோயாளிகள் உயிர்பிழைப்பதில் சிக்கல்!… கவலைக்குரிய நிலையில் காசா!

Thu Oct 12 , 2023
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,055-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 5,000 பேர் காயமடைந்துள்ளனர். […]

You May Like