fbpx

’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

மக்களை பற்றி கவலைக் கொள்ளாமல், விளம்பரத்திலேயே திமுகவினர் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசை கண்டித்து வரும் 25ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அது தொடர்பாக கோவை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதய தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, “மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி வன்முறை மூலம் உளவுத்துறை என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியவில்லை என நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. அரசு ஊழியர்கள் எப்போதும் திமுகவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், அவர்களே தற்போது நொந்து நூலாகியிருக்கின்றனர்.

’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்திருக்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படாமல், விளம்பரத்திலேயே ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சொத்துவரியை அதிகரித்தனர். அதிமுக ஆட்சியில் சொத்துவரி ஏற்றும் சூழ்நிலை வந்தும், மக்கள் நலன் கருதி எடப்பாடியார் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். மின்சாரக் கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்த வேண்டும் எனச் சொல்லவில்லை. மானியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களில் கட்டணத்தை உயர்த்தச் சொல்வார்கள். மத்திய அரசாங்கம் சொல்லும் அனைத்தையும் மாநில அரசு கேட்க முடியுமா?. இல்லை இவர்கள் எல்லாவற்றையும் கேட்கத்தான் செய்கிறார்களா?

’மத்திய அரசு சொல்லும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா’..? எஸ்.பி.வேலுமணி காட்டம்

மக்கள் ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு மேற்கொண்டு சுமையை அதிகரித்து வருகின்றனர். எல்லா சாலைகளும் சேதமடைந்திருக்கின்றன. நாம் போராட்டம் செய்தாலே போலீஸ், அதிகாரிகள் அலர்ட் ஆகிவிடுவார்கள். மக்களின் உரிமையைக் கேட்டுப் போராட நம்மைத் தவிர, வேறு எந்தக் கட்சியும் கிடையாது. தமிழ்நாட்டில் முக்கியமாக கோவையில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. எந்த அரசு அலுவலகம் சென்றாலும் லஞ்சம்தான் விளையாடுகிறது. ஆனால், அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் போல நம்மை பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்

Chella

Next Post

“ மாணவியின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ளவில்லை எனில்....” உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..

Fri Jul 22 , 2022
கள்ளக்குறிச்சி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like