மக்கள் விரோத செயல்களில் போலீசார் சிலர் ஈடுபடுவது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறையை கலங்கி நிற்கிறது. சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த சிலரே குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறது.
அதேபோல் நம் தமிழ் சமுதாயத்தை போதை பொருள் நடமாட்டத்தில் இருந்து எப்படி பாதுகாக்க போகிறோம் என்கிற அச்சம் எழுகிறது. இன்றைக்கு ஒவ்வொரு நாளும் மக்கள் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. அவர்களின் பாதுகாப்பு குறித்து அந்த செய்தி மறக்கப்படுகிறது. இது நாடா? சுடுகாடா? என்று தெரியவில்லை. மக்கள் விரோத செயல்களில் போலீசார் சிலர் ஈடுபடுவது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் தான் தமிழ்நாடு இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் – ஒழுங்கு மீண்டும் காப்பாற்றப்படும். போதை பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படும்” என்றார்.