fbpx

இனி இந்த 4 நடிகர்களும் நடிக்க முடியாதா..? ரெட் கார்டு..!! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய 4 பேருக்கு ரெட் கார்டு வழங்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது. அதேபோல, நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

நடிகர் தனுஷூக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரித்த படத்தில், 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது. இறுதியாக, தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்ட சம்பவம், கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அமேசான் கேஷ் ஆன் டெலிவரி..!! இனி வாங்க மாட்டோம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Thu Sep 14 , 2023
இந்தியாவில் கடந்த மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றலாம் என செப். 30ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் வழங்கி மாற்றி வருகின்றனர். அதோடு பலரும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் அமேசான் […]

You May Like