11ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! இன்று முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம்..!!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகலினை இன்று மே 30ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அத்துடன் மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, நாளை மே 31 முதல் ஜூன் 4ஆம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு பாடத்திற்கும் மறுமதிப்பீடுக்கு ரூ.505 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல்-II க்கு உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 எனவும், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’இனி குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்’..!! அமைச்சர் அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

English Summary

Students who appeared in Tamil Nadu Class 11 General Examination can download their answer sheet copy today

Chella

Next Post

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் கல்லூரி திறப்பு...!

Thu May 30 , 2024
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் கல்லூரி திறக்கப்பட உள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்கப்படும். இதில் முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ […]

You May Like