நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய எம்பி ஆ.ராசா, ”கடவுள் தேவைப்படுவோர் வைத்து கொள்ளலாம். சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்களும் பொட்டு வைத்து, சங்கியும் பொட்டு வைக்கும்போது எவன் சங்கி, எவன் திமுககாரன் என்பதே தெரியாது. இதனால் திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம்” என்று பேசினார்.
திமுக கரை வேட்டி கட்டினால், இந்து என்ற அடையாளத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது போல ஆ.ராசா பேசியிருப்பது திமுகவினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு தொடர்பாக பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ”அது ராசாவின் தனிப்பட்ட கருத்து. தலைவர் (ஸ்டாலின்) அதுபோன்று எதுவும் கூறவில்லை” என்றார்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சு குறித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திமுக ஒரு இந்து விரோத நச்சுப் பாம்பு. திமுக கரை வேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம். கையில் கயிறு கட்ட வேண்டாமென்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும் ஆ.ராசா, திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களிடம் தொப்பி அணிய வேண்டாம், தாடி வைக்க வேண்டாம் என்று சொல்வாரா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Read More : பங்குனி உத்திரம்..!! நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!