மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜிஎஸ்கே மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து புற்றுநோய்க்கு முந்தைய கட்டத்தில் செல்களை குறிவைக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பே, பயங்கரமான நோயை நிறுத்த முடியும். இந்த மருந்து, புற்றுநோய்க்கு முந்தைய கட்டத்தில் உள்ள செல்களை குறிவைத்து அழிக்கும், நோய் எப்போதும் உருவாகாமல் தடுக்கும் திறனைக் கொண்டிருக்கும்.
GSK-Oxford Cancer Immuno-Prevention Program உடன் இணைந்து வழிநடத்தும் Oxford பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாரா பிளாக்டன் கூற்றுப்படி, தடுப்பூசி புற்றுநோய் செல்களை தாக்கி, நோய் ஏற்படுத்துவதற்கு முன்பே நிறுத்த முடியும். ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “புற்றுநோய் உருவாக, ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில், புற்றுநோய்கள் உருவாக 20 வருடங்கள் ஆகும், சில சமயங்களில் இன்னும் அதிகமாகும்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த தடுப்பூசியின் நோக்கம் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவது அல்ல, மாறாக புற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு எதிராக தடுப்பூசி போடுவது என தெரிவித்தார். நோய் மீண்டும் வருவதையோ அல்லது பிறழ்வதையோ தடுக்கக்கூடிய தடுப்பூசிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில், புதிய தடுப்பூசி நோயைத் தொடங்குவதற்கு முன்பே நிறுத்த விரும்புகிறது. GSK மற்றும் Oxford புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்காக 2021 இல் மூலக்கூறு மற்றும் கணக்கீட்டு மருத்துவ நிறுவனத்தை நிறுவிய பிறகு இந்த திட்டம் வருகிறது.
2020 இல் புற்று நோய் பாதிப்பு 10 மில்லியல் இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20 மில்லியன் புதிய வழக்குகள் மற்றும் 9.7 மில்லியன் புற்றுநோய் தொடர்பான இறப்புகள் இருந்தன. நுரையீரல், குடல், கல்லீரல் மற்றும் வயிறு ஆகியவை உலகளவில் புற்றுநோய் இறப்புக்கு மிகவும் பொதுவான காரணங்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.