நமது கலாச்சாரத்தின் படி பெண்கள் புடவை அணிவது தான் வழக்கம். தற்போது உள்ள காலகட்டத்தில் பலர் புடவை அணிவதை நிறுத்தி விட்டனர். பண்டிகை காலங்களில் மட்டுமே அணிய கூடிய உடையாக புடவை மாறிவிட்டது. ஆனால், இன்றும் புடவையை தவிர மற்ற உடைகளை அணியாத பெண்கள் பலர் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை அணிவது தான் பெண்களின் உடல் நலத்துக்கு நல்லது என்று பலர் கூறினார்.
ஆனால், மருத்துவர்கள் இன்று புடவை கட்டுவதால் கேன்சர் ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர். ஆம், உண்மை தான் சாரி கேன்சர் என்றும் அழைக்கப்படும் ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (SCC) என்பது ஒரு வகை தோல் புற்றுநோயாகும். இந்த வகையான புற்றுநோய் நாள்பட்ட எரிச்சல் அல்லது உராய்வு வெளிப்படும் பகுதிகளில் உருவாகும். புடவைகளால் பிரத்தியேகமாக இந்த கேன்சர் உருவாகவிட்டலும், இறுக்கமாக அணிந்திருக்கும் உள்பாவாடைகளால் இந்த வகை கேன்சர் உருவாகிறது.
கழுத்து மற்றும் முகம் போன்ற சூரிய ஒளி படும் பகுதிகளில் பரவுவதால் “சேலை புற்றுநோய்” என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இது தோலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் தட்டையான செல்களான செதிள் உயிரணுக்களில் உருவாகும் ஒரு வகை தோல் புற்றுநோயாகும். இந்த வகை புற்றுநோய் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.
சிவப்பு அரிப்பு திட்டுகள், புண்களின் உருவாக்கம், இடுப்புக்கு அருகில் கட்டிகள் ஏற்படுவது இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள்.. இந்த வகை புற்றுநோயை தடுக்க, தளர்வான புடவைகள் மற்றும் உள்பாவாடைகளை அணியவேண்டும். மேலும், மெல்லிய, கயிறு போன்றவற்றுக்குப் பதிலாக எப்போதும் அகலமான, பெல்ட் போன்ற சரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Read more: பொதுவெளியில், பெண்களின் அந்தரங்க பகுதியில் கை வைத்த வாலிபர்; போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..