fbpx

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் பயன்படுத்தினால் கேன்சர்…! பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு…!

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் போன்றவற்றை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024- 2025 கல்வியாண்டு முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் உபயோகிக்கும் டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டல் போன்றவற்றை பிளாஸ்டிக்கால் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட ஆணையிட வேண்டும் எனவும், பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டல் போன்றவைகள் மாணவ மாணவிகளுக்கு பல நோய்களை உருவாக்கக்கூடியதாவும் மேலும் கொடிய நோயான கேன்சர் வரக்கூடிய நிலையில் உள்ளதால் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளிவளாகத் தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்கமூட்டும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பள்ளிக்காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தின் மூலமாக பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுத்திட சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் வழியாக ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் நோய்கள் குறித்து விவரம் சுற்றுச்சூழல் மூலமாக மன்றம் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Cancer if you use plastic water bottle and tip box

Vignesh

Next Post

ஷாக்!. மது அருந்துவதால் ஆண்டுக்கு 3 மில்லியன் பேர் பலியாகின்றனர்!. உலக சுகாதார நிறுவனம்!

Thu Jun 27 , 2024
Nearly 3 million annual deaths due to alcohol and drug use globally: WHO

You May Like