fbpx

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும்..!! ICMR எச்சரிக்கை..!!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு பெரியளவில் தாக்கவுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வரும் 2045ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் (ICMR) எச்சரித்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வானது நடத்தப்பட்டது.

ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், 2022 மற்றும் 2045-க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்திய 5 பேர் கொண்ட குழு, இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை பொருட்கள் அதிகம் உட்கொள்ளப்படுவதால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க முதற்கட்டமாக சுகாதார காரணிகளை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

English Summary

Shocking information has come out that the incidence of cancer in India is on the rise.

Chella

Next Post

சார்ஜ் போடும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! இதனாலதான் ஃபோன் சார்ஜ் சீக்கிரம் குறையுது..!!

Thu Oct 17 , 2024
Your smartphone's battery level needs to be charged after it drops to 20%.

You May Like