fbpx

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்…! ஆன்லைன் மூலம் பதிவிறக்கம்… முழு விவரம் இதோ.‌‌..

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் உள்ள பாடம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இந்த நாணயத்தை வாங்க மறுத்தால் சட்டப்படி குற்றம்...! உடனே நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு...!

Mon Feb 27 , 2023
10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10, 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்துகள் போன்ற இடங்களில் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. 10,20 […]

You May Like