8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வை எழுத அனுமதி கிடையாது. தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.