fbpx

#Exam: அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி பொதுத் தேர்வு…! இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்…!

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வை எழுத அனுமதி கிடையாது. தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.. மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக வாங்கலாம்..

Thu Sep 29 , 2022
இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் […]

You May Like